ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் அறிவிப்பு! பட்டையைக்கிளப்பும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா! தனது இடத்தை இழந்த ஜஸ்பிரித் பும்ரா!
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பட்டியலில் எப்போதும் போல் விராட் கோலி 861 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இரண்டாவது இடத்திற்கு 855 கோலியுடன் ரோகித் சர்மா இருக்கிறார். முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் 2 இந்திய வீரர்கள் இவர்கள் மட்டுமே பந்துவீச்சிலும் முதலிடத்தில் இருந்தார் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வெறும் மூன்று புள்ளிகளில் நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் இடம் தன இடத்தை இறந்துள்ளார் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடத்தில் இருக்கும் ஒரே வீரர் இவர்தான்.
பந்துவீச்சுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது 2ஆம் இடத்தை தக்க வைத்துள்ளார். முதல் இடத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் உள்ளார். 3ஆம் இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானும், 4ஆம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸும், 5ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமத் நபி முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தான் வீரர் இமாத் வசிம், நியூசிலாந்து வீரர் கோலின் டி கிராண்ட்ஹோம், இங்கிலாந்து வீரர் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் 2, 3, 4, 5 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர். இந்தியாவில் இருந்து ரவீந்திர ஜடேஜா 8வது இடத்தை பிடித்துள்ளார்.