ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பு: இனி டெஸ்ட் தொடர்கள் இப்படி தான் நடைபெறும்!! 1

டெஸ்ட் தொடர்கள் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடராக அமையாமல் சாம்பியன்ஷிப் தொடராகஇனி நடைபெறும் என ஐசிசி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.

டெஸ்ட் விளையாட்டுகள் துவங்கி ஏறக்குறைய 150 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் இருக்கையில், இதுவரை நடந்ததை போல அல்லாமல் ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் நடத்தப்பட்டுவரும் சாம்பியன்ஸ் கோப்பையை போன்ற ஒருமுறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டுவர ஐசிசி முடிவு செய்து, அனைத்து டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஐசிசி வெளியிட்டது.

ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பு: இனி டெஸ்ட் தொடர்கள் இப்படி தான் நடைபெறும்!! 2

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் சொந்த மைதானத்தில் மற்றும் வெளி மைதானத்தில் என இருமுறை டெஸ்ட் தொடர்களை மேற்கொள்ளும்.

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பு: இனி டெஸ்ட் தொடர்கள் இப்படி தான் நடைபெறும்!! 3

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் முடிவு பெற்றவுடன் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவர். அதில் வெற்றி பெறும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும்.

மொத்தம் 27 டெஸ்ட் தொடர்கள் அடங்கிய இந்த சாம்பியன்ஷிப் தொடரில், 71 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறுகின்றன.

வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் இருந்து இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்குகிறது. 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் ஐசிசி அறிவிப்பில் தெரியப்படுத்தியது.

ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பு: இனி டெஸ்ட் தொடர்கள் இப்படி தான் நடைபெறும்!! 4

மேலும், இனி ஒவ்வொரு முறையும் டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடைபெறும் என்பதையும் ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்தது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *