தரமான பரிசு... டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு; மாஸான இடத்தில் ஹர்திக் பாண்டியா !! 1

சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வை அறிவிக்கும் அளவிற்கு கடந்த வருடத்தில் மிக மோசமான பார்மில் இருந்த ஹர்திக் பாண்டியா, கடந்த ஐபிஎல் தொடரின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்தார்.

தரமான பரிசு... டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு; மாஸான இடத்தில் ஹர்திக் பாண்டியா !! 2

கடந்த ஐபிஎல் தொடரின் மூலம் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா மீது முழு நம்பிக்கை வைத்து அவரை அணியில் எடுத்ததோடு, அவரையே தனது கேப்டனாகவும் நியமித்தது. கேப்டன்சியில் அனுபவம் இல்லாததோடு, மோசமான பார்மிலும் இருக்கும் ஹர்திக் பாண்டியாவால் என்ன செய்துவிட முடியும், அவரை கேப்டனாக்கியது குஜராத் அணிக்கு பிரச்சனையையே ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஹர்திக் பாண்டியாவோ பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மாஸ் காட்டியதோடு குஜராத் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்து அசத்தினார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியிலும் மீண்டும் இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்கான தனது பங்களிப்பை 100 சதவீதம் முழுமையாக செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் மிரட்டிய ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு மிரட்டல் வெற்றியையும் பெற்று கொடுத்தார்.

தரமான பரிசு... டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு; மாஸான இடத்தில் ஹர்திக் பாண்டியா !! 3

இந்தநிலையில், தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் மூலம் சர்வதேச டி.20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் ஹர்திக் பாண்டியா பெரும் முன்னேற்றத்தை சந்தித்துள்ளார்.

டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். 2-வது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நீடிக்கிறார். 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி உள்ளார்.

தரமான பரிசு... டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு; மாஸான இடத்தில் ஹர்திக் பாண்டியா !! 4

அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், ரிஸ்வான் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாஸ் ஹசில்வுட்டே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்கா அணியின் ஷம்சி 2வது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசீத் கான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *