ஐசிசி தரவரிசை: 6வது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான்

இந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான். இந்த தொடருக்கு 8வது அணியாக இந்த அணி களமிறங்கியது, ஆனால், இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியால் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளை கீழே தள்ளி, 6வது இடத்திற்கு சென்றது பாகிஸ்தான்.

 

பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் வென்றது மூலம் 95-புள்ளிகள் பெற்று இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளை கீழே தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறியது.

முதல் சுற்றில் வெளியேறிய தென்னாபிரிக்கா அணி 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. உலக சாம்பியன்ஸ் ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சென்றது.

இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றதால் ஒருநாள் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு சென்றது. தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் 3 மற்றும் 1 புள்ளிகள் குறைவாக உள்ளது.

அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி நான்காவது இடத்திலும், நியூஸிலாந்து அணி 5வது இடத்திலும் உள்ளது.

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இன்னொரு நற்செய்தி. அவர்களின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசல்வுட் முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் மீண்டும் டாப் 10இல் வந்துவிட்டார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.