ஒருதினப் போட்டி தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம்!!!

ஐ.சி.சி. சர்வதேச ஒருதின அணிகளுக்கான தரவரிசை பட்டியலை புதன்கிழமை (மே 2) வெளியிட்டது. அதில் இங்கிலாந்து அணி 5 புள்ளிகளை கூடுதலாக பெற்று 125 புள்ளிகளை கொண்டுள்ளது. இந்திய அணி 1 புள்ளியை இழந்து 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக 2014-15ஆம் ஆண்டின் போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது அமைந்துள்ளது. இதில் 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளின் போட்டிகளுக்கு 50 சதவிகிதம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 2014-15 ஆண்டில் நடைபெற்ற 25 போட்டிகளில் 7இல் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. இந்த 25 போட்டிகள் ஐ.சி.சி.யின் நிரந்த உறுப்பு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளாகும்.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்து அணிக்கு மோசமான ஒன்றாக அமைந்திருந்தாலும், அதன் பிறகு நடைபெற்ற தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அதன் பிறகு நடந்த 14 தொடர்களில் 11 தொடர்களை வென்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக 2013இல் அந்த அணி தரவரிசை பட்டியலில் சிறந்த இடத்தை பிடித்தது.

இந்த தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 4 புள்ளிகளை இழந்து 113 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 8 புள்ளிகளை இழந்து 104 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திலும் உள்ளன.

பங்களாதேஷ் அணி 3 புள்ளிகளை கூடுதலாக பெற்று 93 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும், இலங்கை(77) மற்றும் மேற்கிந்திய தீவுகள்(69) அணிகள் முறையே 8 மற்றும் 9வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் 5 புள்ளிகளை பெற்று 63 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே 4 புள்ளிகளை பெற்று 55 புள்ளிகளுடன் 11வது இடத்திலும், அயர்லாந்து அணி 12வது இடத்திலும் உள்ளன.

T20 தரவரிசையில், பாகிஸ்தான் (130) மற்றும் ஆஸ்திரேலியா (126) இரு அணிகளும் முதல் இரண்டு இடங்களில் தொடர்கின்றன. இதற்கிடையில், இந்தியா இரண்டு புள்ளிகள் பெற்று 123 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து (116), இங்கிலாந்து (115) ஆகிய இரு அணிகளும் தரவரிசையில் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்திருகின்றன. தென்னாப்பிரிக்கா (114) மற்றும் மேற்கிந்திய தீவுகள் 3 புள்ளிகளை பெற்று (114), டெசிமல் புள்ளி அடிப்படையில் தென்னாப்பிரிக்கா 6வது இடத்தில் உள்ளது.

T Aravind:

This website uses cookies.