சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்களில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., வெளியிட்டுள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலின்படி, இந்திய கேப்டன் விராட் கோலி 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஷஸ் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் லபுசேன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 3வது இடத்திலும் உள்ளனர். அதே போல் நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் 4வது இடத்திலும், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின் 2வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின் இரண்டாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.