டி20 உலக கோப்பை தொடர்க்கப்பின் டி20 தொடரில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ள மூன்று இந்திய வீரர்கள் குறித்து காண்போம்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு அணியின் கணவுக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை தொடர் இருப்பதால் தொடரின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்த தொடர் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் உலக கோப்பை தொடர்க்கு பின் டி20 தொடரில் இருந்து ஓய்வையை அறிவிக்கும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
முகமது சமி ..
மூன்று விதமான தொடரிலும் இந்திய அணியில் சிறப்பாக செயல்படும் திறமை படைத்த முகமது சமி லாங்கர் பார்மட்டான டெஸ்ட் போட்டிகளில் அதிக காலம் நீடித்து விளையாடும் வேண்டும் என்பதற்காக டி20 தொடரிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுவரை ஓய்வை அறிவிக்காத நிலையில் நிச்சயம் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரப்பின் டி20 தொடரில் இருந்து முகமது சமி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.