டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு அணியின் கணவுக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை தொடர் இருப்பதால் தொடரின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்த தொடர் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தேவையற்ற மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
தீபக் ஹூடா
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தேவையில்லாத வீரர்கள் முதலில் இடம் பெற்றிப்பவர் தீபக் ஹூடா.
ஆல்ரவுண்டர் வரிசையில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இவருக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பந்து வீசுவதற்கான வாய்ப்பே கொடுக்கவில்லை, இதன் காரணமாக இவருக்கு பதில் பந்து வீச்சுக்கும் பயன்படும் வேறொரு நல்ல ஆல்ரவுண்டரை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.