நானே சொல்றேன்... இந்த டீம் சாம்பியன் பட்டம் வெல்வதற்கே வாய்ப்பு அதிகம்; இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக் !! 1

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி எது என்பது குறித்தான தனது கருத்தை இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர் நம்பவர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

நானே சொல்றேன்... இந்த டீம் சாம்பியன் பட்டம் வெல்வதற்கே வாய்ப்பு அதிகம்; இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக் !! 2

ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டி அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 22ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

இந்தநிலையில், நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர், சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி எது என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

நானே சொல்றேன்... இந்த டீம் சாம்பியன் பட்டம் வெல்வதற்கே வாய்ப்பு அதிகம்; இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக் !! 3

இது குறித்து ஜாஸ் பட்லர் பேசுகையில், “டி.20 போட்டிகளில் வெற்றி தோல்வியை கணிக்கவே முடியாது, ஓரிரு நிமிடங்களில் எதுவும் மாறலாம், எந்த அணி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்த்தால் எந்த அணி உலகக்கோப்பை தொடரை நடத்துகிறதோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம். இந்த தொடரிலும் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றே கருதுகிறேன். நாங்களும் வலுவான அணி தான், நாங்கள் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பல போட்டிகளில் விளையாடியிருந்தாலும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மையை கணிப்பது சாதரண விசயம் அல்ல. யாராலும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தை உடனடியாக கணித்துவிட முடியாது. எனவே தான் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *