வாய்ப்பு மட்டும் கொடுங்க... இந்த பையன் தான் கிரிக்கெட் உலகின் அடுத்த நம்பர் 1 வீரர்; முன்னாள் வீரர் உறுதி !! 1

இளம் பந்துவீச்சாளரான அர்ஸ்தீப் சிங்கிற்கு இந்திய நிர்வாகம் அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணியில் உம்ரன் மாலிகிற்கும், அர்ஸ்தீப் சிங்கிற்கும் இடம் கொடுக்கப்பட்டது. அசுரவேகத்தில் பந்துவீசக்கூடியவரான உம்ரன் மாலிக், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறியதால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

ஆனால், அர்ஸ்தீப் சிங்கோ தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மிக சரியாக பயன்படுத்தி கொண்டு, தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கான தனது பங்களிப்பையும் மிக சரியாக செய்து வருகிறார்.

வாய்ப்பு மட்டும் கொடுங்க... இந்த பையன் தான் கிரிக்கெட் உலகின் அடுத்த நம்பர் 1 வீரர்; முன்னாள் வீரர் உறுதி !! 2

இடது கை பந்துவீச்சாளரான அர்ஸ்தீப் சிங்கை முன்னாள் வீரர்கள் பலர், ஜாஹிர் கானுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு அர்ஸ்தீப் சிங்கும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொண்டே உள்ளார். எதிர்வரும்ட் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அர்ஸ்தீப் சிங்கின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்பதால் முன்னாள் வீரர்கள் பலர், அர்ஸ்தீப் சிங்கிற்கான தங்களது ஆலோசனைகளை வழங்குவதோடு, அவரை பாராட்டியும் பேசி வருகின்றனர்.

அந்தவகையில், அர்ஸ்தீப் சிங் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த், அர்ஸ்தீப் சிங்கிற்கு இந்திய அணி சரியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு மட்டும் கொடுங்க... இந்த பையன் தான் கிரிக்கெட் உலகின் அடுத்த நம்பர் 1 வீரர்; முன்னாள் வீரர் உறுதி !! 3

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், “அர்ஸ்தீப் சிங்கிற்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நிச்சயமாக டி.20 போட்டிகளில் அர்ஸ்தீப் சிங் கிரிக்கெட் உலகின் நம்பர் 1 வீரராக உருவெடுப்பார். அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சில் தனித்துவம் உள்ளது. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அர்ஸ்தீப் சிங்கிற்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.