"இதை எல்லாரும் மறந்துடீங்க" பவுலிங்க விட பேட்டிங்ல இந்தியாவுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கு - சுட்டிக்காட்டிய பேட்டிங் ஜாம்பவான்! 1

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஏதேனும் ஒரு இடது கை பேட்ஸ்மேன்கள் நிச்சயம் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

"இதை எல்லாரும் மறந்துடீங்க" பவுலிங்க விட பேட்டிங்ல இந்தியாவுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கு - சுட்டிக்காட்டிய பேட்டிங் ஜாம்பவான்! 2

இந்திய அணிக்கு  சமீபகாலமாக பந்துவீச்சு  பெரிய பின்னடைவாக இருந்து வந்திருக்கிறது. பேட்ஸ்மேன்கள் போதுமானவரை ரன் குவிப்பில் ஈடுபட்டு நன்றாக செயல்பட்டு வருகின்றனர். ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் அரைசதம் அடித்து விடுகின்றனர். ஆனால் பந்துவீச்சில் அதிக ரன்களை வாரிக்கொடுத்து அடித்த ரன்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இதுவரை தொடர்ந்து அதுபோன்ற ஒரு பிரச்சனையை மட்டுமே இந்திய அணி சந்தித்து வந்திருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு பேட்டிங்கிலும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது சரி என்றும் தெரிகிறது. அவர் கூறியதாவது:

"இதை எல்லாரும் மறந்துடீங்க" பவுலிங்க விட பேட்டிங்ல இந்தியாவுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கு - சுட்டிக்காட்டிய பேட்டிங் ஜாம்பவான்! 3

“இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை வெளியில் அமர்த்தி விட்டால், 6 பேட்ஸ்மேன்கள் வரை வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். அக்சர் பட்டேல் உள்ளே எடுக்கப்பட்டிருந்தால் அவருக்கு இடதுகை பேட்டிங் இருக்கிறது. ஆனாலும் அவர் கடைசி ஓரிரு ஓவர்கள் மட்டுமே களம் இறங்குவார். சில நேரங்களில் களமிறங்குவதே இல்லை. முதல் ஐந்து வீரர்களில் ஏதேனும் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருந்தால், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு பெருத்த சிக்கலை கொடுக்கும். ஃபீல்டிங்கை ஒவ்வொரு பந்திருக்கும் மாற்ற வேண்டியதாக வரும். எதிரணி கேப்டனும் அந்த சமயத்தில் சில தவறுகளை செய்ய நேரிடலாம். ஆகையால் நிச்சயம் பிளேயிங் லெவனில் குறிப்பாக முதல் ஐந்து அல்லது ஆறு பேட்ஸ்மேன்களில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கும்.” என்றார்.

மேலும், “அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும் என நான் கணிக்கிறேன். அதற்காக தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை குறைவாக எடை போடக்கூடாது. அவர்கள் பந்துவீச்சில் தாக்குதலை ஏற்படுத்தக்கூடியவர்கள். ஆஸ்திரேலியா மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும்  இந்த இரண்டு அணிகளிடமும் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். எதிரணிகள் அவர்களை சற்று கவனத்துடன் எதிர் கொள்ள வேண்டும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *