ஐசிசி இன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கான தரவரிசையிலும் இந்தியா டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசை
ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆடிய 62 ஒருநாள் போட்டிகளில் 43 போட்டியை வென்று, வெறும் 14 போட்டிகளில் மட்டுமே தோல்வியை பெற்றுள்ளது. 123 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் நீடிக்கிறது. இந்திய அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 70 போட்டிகளில் 49 போட்டிகளை வென்று 18 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

தரவரிசை பட்டியல்
1 இங்கிலாந்து 123 (-)
2 இந்தியா 121 (+1)
3 தென் ஆப்ரிக்கா 115 (+3)
4 நியூசிலாந்து 113 (+1)
5 ஆஸ்திரேலியா 109 (+1)
6 பாகிஸ்தான் 96 (-1)
7 பங்களாதேஷ் 86 (-4)
8 மேற்கிந்திய தீவுகள் 80 (+4)
9 இலங்கை 76 (-)
10 ஆப்கானிஸ்தான் 64 (-)
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மேலும் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் நீடிக்கின்றனர். நான்காவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி பின்னுக்குத் தள்ளப்பட்டு தற்போது நான்காவது இடத்தை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 5வது இடத்திலும், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
தரவரிசைப் பட்டியல்
1 இந்தியா 113 (-3)
2 நியூசிலாந்து 111 (+3)
3 தென் ஆப்ரிக்கா 108 (+3)
4 இங்கிலாந்து 105 (+1)
5 ஆஸ்திரேலியா 98 (-6)
6 இலங்கை 94 (+1)
7 பாகிஸ்தான் 84 (-4)
8 மேற்கிந்திய தீவுகள் 82 (+5)
9 வங்காளம் 65 (-3)
10 ஜிம்பாப்வே 16 (+3)