புதிய டெஸ்ட் தரவரிசை… தனது இடத்தை தக்க வைத்து கொண்டார் விராட் கோஹ்லி
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான ஐ.சி.சி., வெளியிட்டுள்ள்ள புதிய தரவரிசை பட்டியலிலும் இந்திய கேப்டன் கோஹ்லி மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா ஆகியோர் தங்களது இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐ.சி.சி,,) இன்று வெளியிட்டது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலி (912 புள்ளிகள்) தனது இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி 12 மாதம் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார்.
இதே போல டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில், ரவிந்திர ஜடேஜா (844), அஷ்வின் (803) ஆகியோர் பின்னுக்குதள்ளப்பட்டு நான்காவது, ஐந்தாவது இடம் பிடித்தனர்.

ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (390) இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அஷ்வின் (367) நான்காவது இடத்தில் உள்ளார். வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் (420) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார்.