ஐசிசி டெஸ்ட் தரவரிசை அறிவிப்பு: விராட் கோலி மாஸ், ரபாட முதலிடம்!! 1

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்காவின் வேகப்புயல் கேகிஸோ ரபாடா முதலிடம் வகிக்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக கடைசியாக டெஸ்ட்டில் 43 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 10% தரவரிசைப் புள்ளிகளை இழந்து ரபாடாவுக்கு முன்னேற வாய்ப்பானது.

நியூசிலாந்துக்கு எதிரான 2வடு டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய யாசிர் ஷா டாப் 10-க்குள் நுழைந்து 10-ம் இடத்தில் இருக்கிறார், நியூஸி.யின் நீல் வாக்னர் 13ம் இடத்துக்குச் சென்றார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை அறிவிப்பு: விராட் கோலி மாஸ், ரபாட முதலிடம்!! 2
Pakistani spinner Yasir Shah (R) celebrates with captain Sarfraz Ahmed after the dismissal of New Zealand batsman Jeet Raval during the third day of the second Test cricket match between Pakistan and New Zealand 

இலங்கையை ஒயிட்வாஷ் செய்த கடைசி கொழும்பு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ 6 இடங்கள் முன்னேறி 16ம் இடத்துக்கும் வங்கதேசத்தின் சாதனையாளர் மோமினுல் ஹக் 11 இடங்கள் முன்னேறி 24ம் இடத்த்துக்கும் வந்துள்ளனர். பாகிஸ்தானின் அசார் அலி 12ம் இடத்துக்கும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் 20வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 99 ரன்களை அடித்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ளார்.

 

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் கிங் கோலி 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் அசைக்க முடியாமல் இருக்கிறார், அடுத்த இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் 910 புள்ளிகளுடன் இருக்கிறார். கேன் வில்லியம்சன் 876 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் 807 புள்ளிகளுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 4ம் இடத்திலும் 803 புள்ளிகளுடன் டேவிட் வார்னர் 5ம் இடத்திலும் உள்ளனர். புஜாரா 765 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளார்.ஐசிசி டெஸ்ட் தரவரிசை அறிவிப்பு: விராட் கோலி மாஸ், ரபாட முதலிடம்!! 3

பந்து வீச்சுத் தரவரிசையில் ரபாடா, ஆண்டர்சனுக்குப் பிறகு பாகிஸ்தானின் மொகமது அப்பாஸ் 829 புள்ளிகளுட்ன 3ம் இடத்திலும் வெர்னன் பிலாண்டர் 4ம் இடத்திலும் ரவீந்திர ஜடேஜா 5ம் இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரநிலையில் ஷாகிப் அல் ஹசன் 405 புள்ளிகளுடன் முதலிடம். ஜடேஜா 400 புள்ளிகளுடன் 2ம் இடம். 3ம் இடத்தில் ஹோல்டரும் 4ம் இடத்தில் பிலாண்டரும், 5ம் இடத்திலும் பென்ஸ்டோக்ஸும் உள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

டெஸ்ட் அணி தரவரிசை

நிலை அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடு
1 இந்தியா 38 4.397 116
2 தென் ஆப்பிரிக்கா 35 3,712 106
3 இங்கிலாந்து 45 4.722 105
4 நியூசிலாந்து 23 2,354 102
5 ஆஸ்திரேலியா 36 3.663 102
6 இலங்கை 38 3.668 97
7 பாக்கிஸ்தான் 24 2,271 95
8 மேற்கிந்திய தீவுகள் 32 2,432 76
9 வங்காளம் 19 1,268 67
10 ஜிம்பாப்வே 8 12 2

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 விராத் கோலி இந்தியா 935
2 ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 910
3 கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 875
4 ஜோ ரூட் இங்கிலாந்து 827
5 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 803
6 சேதுஷ்வர் புஜாரா இந்தியா 765
7 டிமுத் கருணாரட்ன எஸ்.எல் 740
8 டீன் எல்கர் எஸ்.ஏ. 724
9 ஐடின் மார்கரம் எஸ்.ஏ. 703
10 தினேஷ் சந்திமால் எஸ்.எல் 702

டெஸ்ட் பவுலர் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1  கஜிஸோ ரபாடா எஸ்.ஏ 883
2 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 882
3 முகம்மது அப்பாஸ் பாகிஸ்தான் 838
4 வெர்னான் Philander எஸ்.ஏ. 826
5 ரவீந்திர ஜடேஜா இந்தியா 812
6 ட்ரென்ட் போல்ட்  நியூசிலாந்து 796
7 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 784
8 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 777
9 ஜேசன் ஹோல்டர் மேற்கிந்தியத் 766
10 நீல் வாக்னர் நியூசிலாந்து 763

டெஸ்ட் ஆல் ரவுண்டர்ஸ் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ஷகிப் அல் ஹசன் தடை 403
2 ரவீந்திர ஜடேஜா இந்தியா 400
3 ஜேசன் ஹோல்டர் மேற்கிந்தியத் 380
4 வெர்னான் Philander எஸ்.ஏ. 370
5 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 341

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *