சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டி வீரர்களுககான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 3-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் 67 ரன்களுக்கு 10 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு ஸ்டூவர்ட் பிராட்வேகப்பந்துவீச்சுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையையும் ஸ்டூவர்ட் பிராட் பெற்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் டெஸ்ட் தரவரியைில் டாப் 5 இடங்களுக்குள் இப்போதுதான் ஸ்டூவர்ட் பிராட் வந்துள்ளார்.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக பேட் செய்த பிராட் 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அதேவேகமாக அரைசதம் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி வரிைசயில் களமிறங்கிய வீரர் அதிகவேகமாக அரைசதம் அடித்த 3-வது வீரர் எனும் பெருமை பிராட் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தையும்,பேட்டிங்கில் 7 இடங்களும் பிராட் முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சில் 823 புள்ளிகளுடன் பிராட் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் உள்ளார். 2-வது இடத்தில் 843 புள்ளிகளுடன் நீல் வாகனரும், 4-வது இடத்தில் டிம் சவுதியும், 5-வது இடத்தில் ஜேஸன் ஹோல்டரும் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 779 புள்ளிகளுடநஅ 8-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 886 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 3-வது இடத்தில் ஆஸி. வீரர் லாபுஷேன், 4-வது இடத்தில் பென் ஸ்டோக்ஸும், 5-வது இடத்தில் கேன் வில்லியம்ஸனும் உள்ளனர்.
8-வது இடத்தில் இந்திய வீரர் சத்தீஸ்வர் புஜாரா 766 புள்ளிகளுடனும், அஜின்கிய ரஹானே 726 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவும், 5-வது இடத்தில் ரவிச்சந்திர அஸ்வினும் மாற்றமில்லாமல் தொடர்கின்றனர்.
இதில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கடைசிடெஸ்டில் 5-வது விக்கெட் வீழ்த்தியதையடுத்து, 20-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். அதேபோல ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்ததால் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 13-இடங்கள் முன்னேறி, 17-வது இடத்துக்கும், ஒலி போப் அரைசதம் அடித்ததால், 24 இடங்கள் முன்னேறி 42-வது இடத்துக்கும் உயர்ந்துள்ளனர்.