இறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இளம் இந்திய படை; போட்டி விபரம் இதோ !! 1

இறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இளம் இந்திய படை; போட்டி விபரம் இதோ

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் வங்கதேச அணி மோதவுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற நிலையில், 2-ஆவது அரையிறுதிப் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.

இறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இளம் இந்திய படை; போட்டி விபரம் இதோ !! 2

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 45-ஆவது ஒவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 2‌15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணி முதல் முறைய‌ாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் வரும் 9-ஆம் தேதி தென்னாப்ரிக்காவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இளம் இந்திய படை; போட்டி விபரம் இதோ !! 3

போட்டி விபரம்;

நாள் – 9ம் தேதி (ஞாயிற்றுகிழமை)

இடம்; சென்வீஸ் பார்க்

இந்திய அணி;

ப்ரியம் கர்க் (கேப்டன்), கார்திக் தியாகி, யாஸ்சவி ஜெய்ஸ்வால், வித்யாதர் படீல், திலக் வர்மா, சுப்பங்க் ஹெட்ஜ், திவ்யானஸ் சஹெனா,ரவி பிசோனி, ஷஸ்வண்ட் ராவட், துருவ் ஜூரல், சித்தேஸ் வீர், ஆகாஷ் சிங், அதர்வா, அன்கோலெகர், சுஸ்வந்த் மிஸ்ரா, குமார் குஸ்காரா.

வங்கதேச அணி;

பர்வேஸ் ஹூசைன் இமோன், தன்சித் ஹசன், மஹ்மதுல் ஹசன்,தவ்ஹீத் ஹிரோடி, ஷஹாதட் ஹூசைன், ஷமிம் ஹூசைன், அக்பர் அலி, ராகிபுல் ஹசன், சோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன், ஹசன் முராத், சாஹின் ஆலம், ப்ரண்டிக் நவ்ரோஸ் அவிசேக் தாஸ், மிரிடுன்சாய் சவ்துரி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *