"உலகக்கோப்பை இந்த அணிக்கு தான்" அடிச்சு சொல்லும் இந்திய அணியின் ஜாம்பவான் கணிப்பு!! 1
Indian and Pakistan (R) players line up for the national anthem just before the start of the one day international (ODI) Asia Cup cricket match between Pakistan and India at the Dubai International Cricket Stadium in Dubai on September 19, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

இந்தாண்டு உலககோப்பையை வெல்லப்போவது இந்திய அணிதான் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில் தேவ்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை துவங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்துவிட்டன.

ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என பல முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்துவருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

"உலகக்கோப்பை இந்த அணிக்கு தான்" அடிச்சு சொல்லும் இந்திய அணியின் ஜாம்பவான் கணிப்பு!! 2
RANCHI, INDIA – MARCH 08: Virat Kohli of India leads his team out during game three of the One Day International series between India and Australia at JSCA International Stadium Complex on March 08, 2019 in Ranchi, India. (Photo by Robert Cianflone/Getty Images)

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் – சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

குறிப்பாக, பும்ராஹ் மற்றும் ஷமி இருவரும் ஐபிஎல் தொடரிலும் பந்துவீச்சில் அசத்தி, 17-20 ஓவர்களில் ரன்களை மிக சிறப்பாக கட்டுப்படுத்தினர். இது இந்திய அணிக்கு இங்கிலாந்து போன்ற வேகபந்துவீச்சிற்கு சாதகமான மைதானங்களில் பெரும் உதவியாக இருக்கும்.

அதேபோல, தவான், கோஹ்லி, தோனி போன்ற வீரர்களும் ஐபிஎல் தொடரின் மூலம் நல்ல நிலைக்கு திரும்பியிருப்பதும் இந்திய அணிக்கு பலமாக அமையும்.

"உலகக்கோப்பை இந்த அணிக்கு தான்" அடிச்சு சொல்லும் இந்திய அணியின் ஜாம்பவான் கணிப்பு!! 3
India’s Mohammed Shami (L) celebrate with team captain Virat Kohli after dismissing Australia’s Glenn Maxwell (not in picture) during the third one-day international cricket match between Australia and India at the Melbourne Cricket Ground in Melbourne on January 18, 2019. (Photo by Jewel SAMAD / AFP) / — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo credit should read JEWEL SAMAD/AFP/Getty Images)

இந்தியா கடந்த 3 வருடங்களாக ஒருநாள் தொடரில் மிகுந்த ஆதிக்கன் செலுத்தும் அணியாக இருந்துள்ளது. தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

இந்த உலககோப்பை குறித்து தனது கணிப்பினை வெளியிட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில் தேவ் கூறியதாவது, இந்திய அணி இளம் மற்றும் மூத்த அனுபவுள்ள என ஒரு கலவையான வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறது. வேகபந்துவீச்சு பலம் சேர்க்கும் வகையிலும், சூழலில் குலதீப், சஹால் அசத்துவதால் அவர்களுடன் ஜடேஜா இணைந்திருப்பது மேலும் பலமே. பேட்டிங் பற்றி சொல்லவே வேண்டாம். உலகின் தலைசிறந்த வீரர்கள் இங்கு தான். இதனால் இந்த முறை உலகக்கோப்பை இந்திய அணிக்கு தான் என்று  கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *