விண்டீஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா
விண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், விண்டீஸ் அணியும் மோதுகின்றன.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளனர்.
அதே வேளையில், விண்டீஸ் அணியில் இருந்து ஆஸ்லே நர்ஸ் மற்றும் ஈவின் லீவிஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஃபேபியன் ஆலன் மற்றும் சுனில் ஆம்ப்ரிஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணி;
கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.
இன்றைய போட்டிக்கான விண்டீஸ் அணி;
கிரிஸ் கெய்ல், சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெய்ட்மர், ஜேசன் ஹோல்டர், கார்லஸ் பிராத்வொய்ட், ஃபேபியன் ஆலன், கீமர் ரோச், செல்டான் காட்ரல், ஓஸ்னே தாமஸ்.