2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுவரை தோல்வியை தழுவிராத அணியாக இருந்த இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியாவின் நடுத்தர பேட்டிங் வரிசை எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.

அடுத்ததாக, வங்கதேச அணியை துவக்கத்தில் சிறப்பாக ஆடிய இந்தியா விக்கெட்டை இழக்க நேரிட்ட தருணத்தில் நடுவரிசை வீரர்கள் பாண்டியா, தினேஷ் கார்த்திக், இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதையும் நாம் கண்டோம். முதல் விக்கெட்டிற்கு 180 ரன்கள் கிடைத்த பிறகு 350க்கும் மெல் வரும் என்றிருந்த நிலையில், 314 ரன்கள் மட்டுமே எடுத்தது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
தோனி மற்றும் கேதார் ஜாதவை மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். நிச்சயம் மாற்றம் தேவை என கடுமையாக விமர்சித்த சச்சின் டெண்டுல்கர், இம்முறை உலககோப்பையை வெல்லப்போவது இந்தியா தான் என உறுதியாக கணித்துள்ளார்.

இந்திய அணியின் தவறுகளை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், வேகபந்துவீச்சாளர்கள் சரி செய்து, விராத் கோலியின் படை உலககோப்பையை தங்கள் கையில் ஏந்துவர் என்றார்.
மேலும், அரையிருதிக்குள் நுழைந்த பின் இரு நல்ல ஆட்டங்களை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் என கூறிவிட்டு, இந்திய அணிக்கு தனது அனுபவத்துடன் கூடிய அறிவுரையும் தெரிவித்தார்.

அதன் பிறகு 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நினைவுகூர்ந்த சச்சின், “என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக என்றும் அதுவாகத்தான் இருக்கும்” என தெரிவித்து விட்டு, கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை மீண்டும் ஒரு முறை கோலி தலையிலான இந்திய அணி நிகழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்க கோப்பையை இந்தியாவிற்கு எடுத்து வரும் என்று நம்பிக்கையையும் அளித்தார்.