எனது சாதனையை இவர் முறியடிக்க வேண்டும்; சச்சின் டெண்டுல்கர் விருப்பம் !! 1

எனது சாதனையை இவர் முறியடிக்க வேண்டும்; சச்சின் டெண்டுல்கர் விருப்பம்

உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி, சிறப்பாக ஆடிவருகிறது.

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி கண்டது. இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். இந்திய அணியின் மிகப்பெரிய பலமான டாப் 3 பேட்ஸ்மேன்களும் செம ஃபார்மில் இருப்பது, மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் சூப்பராக ஆடி சதமடித்தார். விராட் கோலி பல ஆண்டுகளாகவே டாப் ஃபார்மில் இருக்கிறார்.

எனது சாதனையை இவர் முறியடிக்க வேண்டும்; சச்சின் டெண்டுல்கர் விருப்பம் !! 2

ஐசிசி தொடர்களில்(சாம்பியன்ஸ் டிராபி, உலக கோப்பை) அபாரமாக ஆடக்கூடிய தவான், இந்த உலக கோப்பையிலும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த சதம், ஐசிசி தொடர்களில் அவர் அடித்த 6வது சதம். இதன்மூலம் ஐசிசி தொடர்களில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் 6 சதங்களுடன் இரண்டாமிடத்தை பாண்டிங் மற்றும் சங்கக்கரா ஆகிய ஜாம்பவான்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் தலா 7 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரும் கங்குலியும் முதலிடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த சாதனை குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ஐசிசி தொடர்களில் அதிக சதங்கள் என்ற சாதனையை தவான் இந்த உலக கோப்பை தொடரிலேயே செய்தால் நல்லா இருக்கும். இங்கிலாந்தில் அந்த சாதனையை படைப்பது சிறப்பானதாக இருக்கும். இதுபோன்ற சாதனைகளை செய்யும்போது இந்திய அணி சிறப்பாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும். நமக்கும் அதுதானே வேண்டும். நமது பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடி எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *