தனது முடிவை தானே தேடிக்கொண்ட அம்பத்தி ராயூடு; ரசிகர்கள் விளாசல் !! 1

தனது முடிவை தானே தேடிக்கொண்ட அம்பத்தி ராயூடு; ரசிகர்கள் விளாசல்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயூடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அம்பாதி ராயுடு, தொடர்ச்சியாக அணியில் இடம்பெற்றதில்லை. அவ்வப்போது எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ராயுடுவுக்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

உலக கோப்பையை மனதில்வைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்கான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ரஹானே, ரெய்னா, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே என பலரை பரிசோதித்து டயர்டான இந்திய அணிக்கு ராயுடுவின் மூலம் தீர்வு காணப்பட்டதாக கருதப்பட்டது.

ராயுடுவுக்கும் கடந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. உலக கோப்பைக்கு ராயுடுதான் நான்காம் வரிசை வீரர் என்று கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் கேப்டன் கோலி உறுதியும் அளித்தார்.

தனது முடிவை தானே தேடிக்கொண்ட அம்பத்தி ராயூடு; ரசிகர்கள் விளாசல் !! 2

ஆனால் உலக கோப்பைக்கு முன்பாக நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சிறப்பாக ஆடிய விஜய் சங்கர் கடைசி நேரத்தில் ராயுடுவின் இடத்தை பிடித்தார். உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்தார். இதனால் ராயுடு கடும் அதிருப்தியடைந்தார்.

இந்நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார் ராயுடு. 33 வயதான ராயுடு, 55 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1694 ரன்கள் அடித்துள்ளார். 6 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ராயுடு, ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலாக அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயூடுவின் பெயர் இடம்பெறாவிட்டாலும், வீரர்கள் யாருக்காகவது காயம் ஏற்பட்டால் அவர்களது இடத்திற்கு மாற்று வீரர்களாக வைத்து கொள்ளப்படும் காத்திருப்போர் பட்டியலில், அம்பத்தி ராயூடுவே முதன்மையானவராக இருந்தார். இருந்த போதிலும் தனக்கு பதிலாக அணியில் தேர்வான விஜய் சங்கரை கிண்டலடிக்கும் வகையிலும் விஜய் சங்கருக்கு ஆதரவாக பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரையும் மறைமுகமாக கிண்டலடிக்கும் வகையில் அம்பத்தி ராயூடு செய்த ட்வீட் ஒன்றே அவரது இந்த நிலைமைக்கு காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

அம்பத்தி ராயூடு அந்த ட்வீட் மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் ரிஷப் பண்ட்டின்ற்கு பதிலாகவே அம்பத்தி ராயூடு தான் இடம்பெற்றிருப்பார் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

அதில் சில;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *