இரண்டாவது அரையிறுதி போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா !! 1

இரண்டாவது அரையிறுதி போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

இங்கிலாந்தில் பிராமின்ஹமில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்  ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து உஸ்மான் கவாஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இரண்டாவது அரையிறுதி போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா !! 2

அதே வேளையில் இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளனர்.

இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளன் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ண்ட்ரூஃப், நாதன் லயோன்.

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணி;

ஜேசன் ராய், ஜானி பாரிஸ்டோவ், ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், கிரிஸ் வோக்ஸ், லியாம் ப்ளன்கட், ஜோஃப்ரா ஆர்சர், அடில் ரசீத், மார்க் வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *