இதே மாதிரி போச்சுன்னா ஹர்திக் பாண்டியாவை வைத்து இந்திய அணிக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது ; ஹர்டிக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் எச்சரிக்கை !! 1
இதே மாதிரி போச்சுன்னா ஹர்திக் பாண்டியாவை வைத்து இந்திய அணிக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது ; ஹர்டிக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் எச்சரிக்கை..

ஹர்திக் பாண்டியவால் இந்திய அணி எதிற்கொள்ளப்போகும் மிகப் பெரிய பிரட்சனை இதுதான்,என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தனது போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இதே மாதிரி போச்சுன்னா ஹர்திக் பாண்டியாவை வைத்து இந்திய அணிக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது ; ஹர்டிக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் எச்சரிக்கை !! 2

ஆசிய கோப்பை மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா, பிரசீத் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் சிலருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதே மாதிரி போச்சுன்னா ஹர்திக் பாண்டியாவை வைத்து இந்திய அணிக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது ; ஹர்டிக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் எச்சரிக்கை !! 3

இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் நடைபெற உள்ள ஆசிய கோப்பைத் தொடர் குறித்த தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருவதோடு தங்களது விருப்பமான அணிகளுக்கு தகுந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி குறித்தும் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் குறித்தும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரியப்படுத்தி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகர்மான ஆகாஷ் சோப்ரா., ஹர்திக் பாண்டியா குறைவாக பந்து வீசுவது இந்திய அணிக்கு ஆபத்தாக அமையக்கூடும் என எச்சரிக்கை எடுத்துள்ளார்.

இதே மாதிரி போச்சுன்னா ஹர்திக் பாண்டியாவை வைத்து இந்திய அணிக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது ; ஹர்டிக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் எச்சரிக்கை !! 4

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்., “ஹர்திக் பாண்டியா கடந்த ஒரு வருடங்களில், 8 ஒரு நாள் தொடர்களில் பங்கேற்றுள்ளார்.அதில் பேட்டிங்கில் ஒரு அரை சதத்துடன் சேர்த்து 198 ரண்களும் பந்துவீச்சில் 9 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 44 ஓவர்கள் வீசியுள்ளார் இதன் அடிப்படையில் வைத்து பார்த்தால் இவர் ஒரு போட்டியில் ஆறு ஓவர்கள் வீசியிருக்கிறார் அது மெச்சி கொள்ளும் அளவிற்கு சிறந்த விஷயம் கிடையாது”.

“இந்திய அணியின் தற்போதைய நிலையில் அவர் இன்னும் அதிகம் பந்துவீச வேண்டும் அவரிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவரை நியூ பாலில் பந்து வீச அதிகம் பயன்படுத்த வேண்டும். அவர் இதுவரை பேட்டிங்கில், 215 பந்துகளை எதிர் கொண்டுள்ளார். சொல்லப்போனால் ஒரு போட்டியில் 25 முதல் 30 பந்துகளை எதிர் கொண்டு தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். எனவே அவர் ஆல்ரவுண்டர் வரிசையில் தான் இடம்பெற வேண்டும்” என ஹர்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *