தரமான செய்கை, விராட் கோலி மற்றும் தோனியின் சாதனை பட்டியலில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் !! 1
தரமான செய்கை, விராட் கோலி மற்றும் தோனியின் சாதனை பட்டியலில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப்..

நேபால் அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப், மகேந்திர சிங் தோனி, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களின் சாதனையை சமன் செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நேபால் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை சுற்றுக்கான தகுதிப்போட்டியில் டாஸ் என்ற நேபால் அணி முதலில் பந்து வீச்சை செய்தது.

தரமான செய்கை, விராட் கோலி மற்றும் தோனியின் சாதனை பட்டியலில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் !! 2

இதனால் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நேபால் வீரர்களின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப்(132) மற்றும் அந்த அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான்(115) ஆகிய இருவரின் உதவியோடு வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் அடித்து நேபால் அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயம் செய்தது.

பின் 339ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலங்கையை நோக்கி களமிறங்கிய நேபால் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் வெறும் 238 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வியை தழுவியது.

தரமான செய்கை, விராட் கோலி மற்றும் தோனியின் சாதனை பட்டியலில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் !! 3

இந்த நிலையில் நேபால் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப்., அதிரடியாக சதம் அடித்ததன் மூலம் ஒரு நாள் தொடரில் சராசரி 50 வைத்துள்ள வீரர்கள் வரிசையில் இடம் பெற்று தரமான சாதனை படைத்துள்ளார்.

தரமான செய்கை, விராட் கோலி மற்றும் தோனியின் சாதனை பட்டியலில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் !! 4

ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 சராசரி(average) வைத்திருந்த வீரர்களாக விராட் கோலி, தோனி, ஏபி டிவில்லியர்ஸ், ஜோ ரூட், மைக்கேல் பேவான் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *