இந்த பாகிஸ்தான் வீரரை தேர்வு செய்ய விருப்பமில்லை, உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் 5 வீரர்கள் குறித்து மனம் திறந்த ஷிகர் தவான்..
உலகக் கோப்பை தொடரில் இந்த 5 வீரர்கள் நிச்சயம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது.
இந்த முறை இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி நிறைவடைய உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருவதால் முன்னாள் வீரர்கள் பலர் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான்.,எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உட்பட 3 வெளிநாட்டு வீரர்களுடன் சேர்த்து 5 வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என தன்னுடைய எதிர்பார்ப்பை தெரியப்படுத்தியுள்ளார்.
அதில்., “என்னுடைய முதல் தேர்வு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தான். அவர் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மேன் அவரால் ரன்களை எளிதாக குவிக்க முடியும். இவரை எடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அவர் நல்ல அனுபவம் உடையவர். மேலும் ஐசிசி மற்றும் இரு தொடர்களின் அதிக ரன்களை குவித்துள்ளார். முக்கியமான போட்டிகளில் இவர் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார்”.
“இவர்களை அடுத்து பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை தேர்வு செய்கிறேன்,அவர் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்.அதற்கு அடுத்ததாக ஆப்கான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை தேர்வு செய்கிறேன், அவருடைய வித்தியாசமான பந்து வீசும் முறை இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இவர் நிச்சயம் இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்துவார். இதனை எடுத்து நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடியை தேர்வு செய்ய மாட்டேன்.ஏனென்றால் ஏற்கனவே ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்துவிட்டதால் இரண்டு இடது பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய விரும்பவில்லை. அதற்கு பதில் நான் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவை செய்கிறேன்,இவருடைய வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் எதிரணி பேட்ஸ்மன்களுக்கு சிரமத்தை கொடுக்கும்” என்று ஷிகர் தவான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.