உண்மைய சொல்றது தப்பில்லயே... பாகிஸ்தானை விட இந்த சின்ன டீம் எவ்வளவோ பெட்டர் ; சோயிப் மாலிக் சொல்கிறார் !! 1
சொயிப் மாலிக்

ஆப்கானிஸ்தான் அணியை விடவும் பாகிஸ்தான் மோசமாக விளையாடுவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷொயப் மாலிக் கடுமையாக முயற்சித்துள்ளார். உலகக் கோப்பை அரை இறுதியில் விளையாடும் என கணிக்கப்பட்ட அணிகளில் பாகிஸ்தான் அணியும் ஒன்று.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றாக உலகக்கோப்பை தொடர் முழுவதுமே மோசமான ஆட்டத்தை பாகிஸ்தான் அணி வீரர்கள் வெளிப்படுத்தி வந்தனர். தொடர்ச்சியாக நன்றாக விளையாடினார் என ஒரு வீரரை கூட சொல்ல முடியாத நிலையில் தான் பாகிஸ்தான் அணி உள்ளது. சென்னையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து பெரும் அவமானத்தை சந்தித்தது. முன்னதாக அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் மண்ணை கவியது.

இந்திய ஏ அணியை விடவும், இந்திய பி அணி பாகிஸ்தானை எளிதாக வென்று விடும் என்ற அளவுக்கு விமர்சனங்கள் இருந்தன. இவை அனைத்திற்கும் முடிவுகட்டும் வகையில் பாகிஸ்தானின் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அந்த அணி சொதப்பியதால் உலக கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் தனது பொறுப்பை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் விளையாட்டு குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷொயப் மாலிக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

என்னை பொறுத்த அளவில் இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை விடவும் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது. ஒருவேளை எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் அந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கலாம். பாகிஸ்தான் அணி வீரர்களை விடவும் ஆப்கான் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நல்ல ஆட்டக்காரர்களாக உள்ளனர். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. என்று கூறியுள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *