இந்திய அணியை காலி செய்தாலே போதும்... நம்மள பாத்து சிரிச்சவனுக எல்லாம் அடங்கிருவாங்க; முன்னாள் வீரர் பேச்சு !! 1
இந்திய அணியை காலி செய்தாலே போதும்… நம்மள பாத்து சிரிச்சவனுக எல்லாம் அடங்கிருவாங்க; முன்னாள் வீரர் பேச்சு

இந்திய அணியுடனான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாக வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரரான நாசிர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தற்போதைய சாம்பியனான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.

வங்கதேச அணியுடனான போட்டியை தவிர, இலங்கை, ஆஃபாகிஸ்தான் உள்ளிட்ட நான்கு அணிகளுடனான போட்டியில் இங்கிலாந்து அணி மிக மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியை காலி செய்தாலே போதும்... நம்மள பாத்து சிரிச்சவனுக எல்லாம் அடங்கிருவாங்க; முன்னாள் வீரர் பேச்சு !! 2

பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்து வகையிலும் மிக மோசமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிக கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் வருகிறது. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வெறும் 156 ரன்களில் ஆவுட்டான இங்கிலாந்து அணி, இறுதி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து அணி, தனது அடுத்த போட்டியில் இந்திய அணியுடன் மோத இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாக வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரரான நாசிர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை காலி செய்தாலே போதும்... நம்மள பாத்து சிரிச்சவனுக எல்லாம் அடங்கிருவாங்க; முன்னாள் வீரர் பேச்சு !! 3

இது குறித்து நாசிர் ஹூசைன் பேசுகையில், “இங்கிலாந்து அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்ததே இல்லை. தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் இங்கிலாந்து அணி மோசமாக விளையாடி வருவது ஆதிர்ச்சியளிக்கிறது. இந்திய அணியுடனான அடுத்த போட்டியிலாவது இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி, இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்திய அணியை மட்டும் வீழ்த்திவிட்டால் இங்கிலாந்து அணி மீதான விமர்ச்சனங்களும், கேலிகளும் இல்லாமல் போய்விடும். இங்கிலாந்து அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் நன்றாகவே விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியால் இந்த தொடரில் சிறப்பாக விளையாட முடியாததற்கு இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகள் மீது பெரிய ஆர்வம் காட்டதே காரணம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *