டிமுத் கருநாரத்நே (இலங்கை)
ஒரு காலத்தில் கெத்து காட்டிய இலங்கை அணி தற்போது அனைத்து விதமான தொடர்களிலும் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. குறிப்பாக டிமுத் கருநாரத்நே தலைமையிலான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 6 தொடர்களில் 12 போட்டிகளில் விளையாடியது அதில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது மேலும் அதில் தோல்வியடைந்த இலங்கை அணி நான்கு போட்டிகள் டிரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது, இதன் காரணமாக அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக திகழும் டிமுத் கருநாரத்நே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் புதிய ஒரு கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
