ஜோ ரூட் (இங்கிலாந்து)
புதிய டெஸ்ட் கேப்டன் தேர்ந்தெடுக்கும் அணிகளில் இங்கிலாந்து அணியும் உள்ளது. கடந்த 6 தொடர்களில் 21 போட்டிகளில் பங்கேற்ற இங்கிலாந்து அணி 11 வெற்றி பெற்றது மேலும் ஏழில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி 3 போட்டிகளை டிரா செய்தது. இந்த 21 போட்டிகளில் 20 போட்டிகளுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தலைமை ஏற்று வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் தலை சிறந்த அணியாக திகழும் இங்கிலாந்து அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகும் முனைப்போடு மிகவும் திறமையாக செயல்பட்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் தோல்வியை தழுவியதால் அந்த வாய்ப்பை நழுவ விட்டது.இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு புதிய ஒரு டெஸ்ட் கேப்டன் இங்கிலாந்து அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
