டிம் பெய்ன் (ஆஸ்திரேலியா)
உலகின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக அந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டைம் பெய்ன் திகழ்ந்து வருகிறார். இவர் கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணிக்காக 14 போட்டிகளில் தலைமை ஏற்று விளையாடினார் அதில் 8 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. மேலும் 2 போட்டிகளில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த போதும் தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியது இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.மேலும் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து இவர் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
