உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இணைய உள்ள புதிய இந்திய வீரர்கள்!
தற்பொழுது ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனைத்து இந்திய ரசிகர்களும் அடுத்து வரவுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஜூன் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 22ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனில் நடக்க உள்ளது.இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய வீரர்களின் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு மெகா சைஸ் அணியை குறி வைத்துள்ள பிசிசிஐ
நடைபெறும் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என பிசிசிஐ குறிவைத்து உள்ளதாக தெரியவருகிறது. அதற்காக ஒரு 30 பேர் கொண்ட அணியை தற்போது தேர்ந்தெடுத்து வருவதாகவும் தெரிகிறது. அந்த அணியில் குறைந்தபட்சம் நான்கு ஓபனிங் பேட்ஸ்மேன்கள், 4 முதல் 5 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், 8 முதல் 9 வேகப்பந்து வீச்சாளர்கள், 4 முதல் 5 ஸ்பின் பவுலர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று விக்கெட் கீப்பர்கள் என ஒரு மெகா சைஸ் அணியை பிசிசிஐ குறி வைத்துள்ளது.
இந்த வீரர்களின் பட்டியல் இன்றோ அல்லது நாளையோ வெளி வந்துவிடும் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது. இங்கிலாந்து சென்று போட்டி நடைபெற உள்ளதால் கண்டிப்பாக அனைத்து வகையிலும் வெற்றிக்கு உதவக் கூடிய வீரர்களை பிசிசிஐ குறி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
புதிதாக இணைய உள்ள வீரர்கள்
இங்கிலாந்து இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய போது இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அனைவரும் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள் என தெரியவருகிறது. மேலும் ஒரு சில வீரர்கள் புதிதாக இணையும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா கடைசியாக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி விளையாடினார். இங்கிலாந்தில் விளையாடிய அவர் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அதில் குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக இரண்டு ஆண்டுகள் விளையாடாத பாண்டியா தற்பொழுது அதிலிருந்து குணம் அடைந்து விட்டாலும் தற்போது அவரால் பவுலிங் வீச முடியாது.

நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் பவுலிங் வீசவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஒருபக்கம் இவர் கண்டிப்பாக இறுதிப்போட்டியில் பங்கேற்பார் என்றும் மறுபக்கம் பங்கெடுக்க போவதில்லை என்றும் கூறிவருகின்றனர். இருப்பினும் இவர் பங்கெடுத்தது அதிக வாய்ப்புள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்வி ஷா
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மிக மோசமாக விளையாடிய காரணத்தினால் இந்திய அணி அதன் பிறகு இங்கிலாந்து தொடரில் அவரை ஒதுக்கியது. ஆனால் அதற்குப் பின்னர் உள்ளூர் தொடர்களில் மிக அற்புதமாக விளையாடி தற்பொழுது நடந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் கூட அவர் சிறப்பாக விளையாடினார். எனவே அவரையும் ஓபனிங் வீரனாக அணியில் எடுத்துக்கொள்ள பிசிசிஐ ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சுப்மன் கில், மயங்க் அகர்வால் ஆகியோருடன் ரிசர்வ் வீரராக இவர் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

பிரசித் கிருஷ்ணா
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மிக அற்புதமாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. ஒருவேளை இவரும் இணைக்கப்பட்டால் வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் மற்றும் இவரும் உட்பட வேகப்பந்து வீச்சில் எந்த குறையும் இல்லை என்பது ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமையும்.

அதைப்போல மறுபக்கம் ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹனுமன் விகாரி ஆகிய 2 பேரும் மறுபடியும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும் பிசிசிஐ உள் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.