கிரிக்கெட்டில் வருகிறது புது ரூல்…. போங்கு’ காட்டி விக்கெட் எடுக்கும் டோணி ஸ்டைல் என்னவாகும்?

எதிரணி ஆட்டக்காரரை குழப்பி வித்தியாசமான முறையில் விக்கெட் எடுக்க டோணி பயன்படுத்தும் சில ட்ரிக்குகளுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதன்படி எதிரணியினருக்கு பந்து உள்ளே வருவது போல மாயை ஏற்படுத்தி டோணி எடுக்கும் டிரேட் மார்க் விக்கெட் முறைக்கு தடை வந்துள்ளது. மேலும் இது போல விக்கெட் எடுத்தால் தண்டனையாக எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆடுகளத்தில் விளையாடும் போது சில பந்துகளை உள்ளே போடுவது போல போடச் சொல்லி பின் வெளியே போட்டுவைத்து விக்கெட் எடுப்பது டோணியின் வழக்கம். சமயங்களில் இப்படி விக்கெட் எடுக்கும் போது டோணி பந்து உள்ளே வருவது போலவே செயல்பட்டு எதிராணியினரை ஏமாற்றுவார்.

டோணியின் இந்த ஸ்டைலுக்கு உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் சிலர் மட்டுமே இது போல வித்தியாசமான விக்கெட் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது இதுபோல எதிரணியை குழப்பி விக்கெட் எடுக்கும் சில ஸ்டைல்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் விதி 41.5ன் படி எதிரணியைச் சேர்ந்தவரை வார்த்தைகள் மூலமாகவோ, செயல்கள் மூலமாகவோ குழப்பி விக்கெட் எடுப்பது தவறு என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிரணியினரை எந்த விதத்திலும் குழப்பக்கூடாது. பேக் பீல்டிங்” என அழைக்கப்படும் இந்த வித பீல்டிங்குகளுக்கு தற்போது முழுக்க முழுக்க தடை விதித்துள்ளது ஐசிசி. இந்த வித விக்கெட் எடுப்புகளுக்கு அபராதமாக எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய உள்நாட்டு விளையாட்டு போட்டிகளில் இந்த ரூல் நடை முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இனிவரும் வரும் காலங்களில் டோணியின் அந்த பழைய ஸ்டைல் விக்கெட் எடுக்கும் வித்தைகள் சிலவற்றை பார்ப்பது கடினம்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.