"wait and see"... இவர் ஒருத்தர் போதும் நாங்க ஈசியா அரையிறுதிக்கு போயிடுவோம்; பாபர் அசாம் நம்பிக்கை !! 1
“wait and see”… இவர் ஒருத்தர் போதும் நாங்க ஈசியா அரையிறுதிக்கு போயிடுவோம்; பாபர் அசாம் நம்பிக்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும் என பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 போட்டிகளை கொண்ட இந்த தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன.

"wait and see"... இவர் ஒருத்தர் போதும் நாங்க ஈசியா அரையிறுதிக்கு போயிடுவோம்; பாபர் அசாம் நம்பிக்கை !! 2

 

நான்காவது இடத்தை பிடிக்க நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது என்றாலும், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 10 சதவீத வாய்ப்பும் உள்ளது என்பதே உண்மை.

தனது கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அணி குறைந்தது 400 முதல் 500 ரன்களாவது அடிக்க வெண்டும், அதோடு 275+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பும் சிக்கலாகி விடும். இங்கிலாந்து அணி நிர்ணயிக்கும் இலக்கை குறைவான ஓவர்களில் எட்டினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியும்.

"wait and see"... இவர் ஒருத்தர் போதும் நாங்க ஈசியா அரையிறுதிக்கு போயிடுவோம்; பாபர் அசாம் நம்பிக்கை !! 3

பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில், அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும் என அந்த அணியின் கேப்டனான பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாபர் அசாம் பேசுகையில், “இங்கிலாந்து அணியுடனான போட்டிக்காக எங்களிடம் திட்டங்கள் உள்ளது. முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்பது மட்டுமே எங்களது திட்டம் இல்லை. போட்டியின் முதல் 10 ஓவர் எப்படி செல்கிறதோ அதை வைத்து, அதற்குகேற்ப தேவையான திட்டங்களை வகுத்து கொள்வோம். எங்களது ஒரே இலக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது தான். எங்களது அதிரடி வீரரான ஃப்கர் ஜமான் 20 முதல் 30 ஓவர்கள் களத்தில் இருந்தால் போதும், எங்களால் எங்களுக்கு தேவையானது நிச்சயம் செய்து கொள்ள முடியும். அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *