ஹர்திக் பாண்டியா வந்துவிட்டால் இந்த வீரருக்கு இடம் கிடைப்பதே கஷ்டம்; முன்னாள் வீரர் உறுதி !! 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ஹர்திக் பாண்டியா குறித்தும் ஷர்துல் தாகூர் குறித்த தனது கருத்தை பேசியுள்ளார்.

முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக முன்புபோல் சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்து வரும் ஹர்திக் பாண்டியா தற்பொழுது எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. மேலும் முழு உடல் தகுதியுடன் திரும்பும்வரை எந்த ஒரு தொடரிலும் பங்கேற்க மாட்டேன் என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துவிட்டார்.

ஹர்திக் பாண்டியா வந்துவிட்டால் இந்த வீரருக்கு இடம் கிடைப்பதே கஷ்டம்; முன்னாள் வீரர் உறுதி !! 2

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலுமே மாஸ் காட்டும் ஹார்திக் பாண்டியா 2018 ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்து வீச முடியாமல் தவித்து வந்த ஹார்த்திக் பாண்டியா இந்திய அணிக்காக லிமிடெட் இவர் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்தார். ஆனால் இவர் முன்பு போல் சிறப்பாக விளையாட முடியவில்லை.

இதனால் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் இருந்தது அதனை தீர்க்கும் வகையில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

ஹர்திக் பாண்டியா வந்துவிட்டால் இந்த வீரருக்கு இடம் கிடைப்பதே கஷ்டம்; முன்னாள் வீரர் உறுதி !! 3

இந்த நிலையில் சர்ச்சையான கருத்துக்கு பெயர்போன இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ஹார்திக் பாண்டியா குறித்தும் ஷர்துல் தாகூர் குறித்தும் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு கொண்டு வந்தார், மேலும் தான் பரிபூரண குணம் அடையும் வரை விளையாட மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார், ஒருவேளை இந்த காயம் சரியாக முடியாமல் பாண்டியாவால் பந்து வீச முடியாமல் போனால் அது இன்னும் மோசமாகிவிடும். ஆனால் ஹர்திக் பாண்டியா பரிபூரண குணமாகி மீண்டும் பழைய ஹர்திக் பாண்டியாவாக உருவெடுத்து வருவார்.

ஹர்திக் பாண்டியா வந்துவிட்டால் இந்த வீரருக்கு இடம் கிடைப்பதே கஷ்டம்; முன்னாள் வீரர் உறுதி !! 4

ஒருவேளை மீண்டும் ஹர்திக் பாண்டியா பரிபூரண குணமாகி சிறப்பாக விளையாட துவங்கினால் இந்திய அணி மீண்டும் ஹர்திக் பாண்டியாவைதான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக தேர்ந்தெடுக்கும் இதனால் ஷர்துல் தாகூர்க்கு வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம். ஆனால் தற்போது வரை அப்படி எதுவும் நடக்கவில்லை, மேலும் ஷர்துல் தாகூர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் அபாரமாக பயன்படுத்தி அசத்தி வருகிறார் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *