முடியவில்லை

முடியவில்லை எனில் ஓய்வு பெறுவேன் : மலிங்கா

இந்தியா இலங்கை இடையேயான 4ஆவது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்தவுடன், பரிசளிப்பு விழாவில் மலிங்கா தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசினார். தன்னால் நன்றாக முடியவில்லை எனில் ஓய்வு பெறுவதாகவும், ஆனால், 2023 உலக்க்கோப்பை வரை விளையாட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. 34 வயதாகும் இவர் யார்க்கர் பந்து வீசுவதில் வல்லவர். சமீப காலமாக இவரது உடற்தகுதி குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது.

முடியவில்லை

இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தரங்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பு கேப்டன் கபுகேதரா காயத்தால் விலகியுள்ளார். இதனால் இன்றைய இந்தியாவிற்கு எதிரான 4-வது போட்டியில் மலிங்கா கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

4-வது போட்டி குறித்து மலிங்கா பேட்டி அளித்தார். அப்போது 34 வயதாகும் தான் 40 வயது வரை, அதாவது 2023 வரை விளையாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து மலிங்கா கூறுகையில்

 

‘‘நான் காயத்தில் இருந்தபோது 19 மாதங்களாக விளையாடவில்லை. அதற்குப் பின் இரண்டு மூன்று தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளேன். தற்போது எனது உடல் நல்ல நிலைமைக்கு திரும்பிவிட்டதாக உணர்கிறேன்.

மீண்டும் உடற்தகுதி பெறுவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறேன். பிட்னெஸ் வேலையை ஏற்கனவே செய்து கொண்டு வருகிறேன். தொடர்ந்து 10 ஓவர்கள் வீச முடியும் என்ற நிலையை எட்டியுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 2023 வரை விளையாட தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

முடியவில்லை

 மலிங்கா நடப்பு தொடர் முடிந்தவுடன் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

4-வது ஒருநாள் போட்டியில் மலிங்கா விராட் கோலியை வீழ்த்தியதன் மூலம் 300 ஒருநாள் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் 10 ஓவர்களில் 82 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது:

நான் காயத்தினால் 19 மாதங்களுக்குப் பிறகே ஆடுகிறேன். ஜிம்பாப்வே, மற்றும் இந்திய அணிக்கு எதிராக நான் சரியாக ஆடவில்லை.

முடியவில்லை

இந்தத் தொடர் முடிந்தவுடன் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைப் பார்த்து, எவ்வளவு காலம் தொடர முடியும் என்பதைக் கணித்து முடிவெடுப்பேன்.

நான் எவ்வளவு அனுபவம் பெற்றவனாக இருந்தாலும் சரி, அணிக்காக போட்டியை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை எனில், அணிக்குத் தேவையானதைச் செய்ய முடியவில்லை எனில் தொடர்ந்து ஆடுவதில் என்ன பயன்?

முடியவில்லை

19 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய பார்முக்கு 3-4 மாதங்களில் திரும்ப முடியுமா என்று பார்க்கப் போகிறேன்.

விராட் கோலி, ரோஹித் அருமையாக ஆடினர், குறிப்பாக விராட் கோலி முதல் 30-40 ரன்களை விரைவு கதியில் அடித்தார்.

முடியவில்லை

பிட்சில் புல் இருந்ததால் ஸ்விங் ஆகும் என்று நினைத்து புல் லெந்தில் வீசினோம், அது எடுபடாமல் போனது.

இதற்கு முந்தைய இலங்கை அணியில் 100 போட்டிகள் அல்லது 50 போட்டிகள் ஆடிய அனுபவ வீர்ர்கள் இருந்தனர், இந்த அணியில் அந்த அனுபவம் இல்லை.

 

மற்ற அணிகள் இந்த விதத்தில் அனுபவ வீரர்களைக் கொண்டுள்ளது, இலங்கையும் அந்த இடத்துக்கு வர வேண்டும்.

– மலிங்கா.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை அபாரமாக வென்று விராட் கோலி தலைமையிளான இந்திய அணி பல சாதனைகளாய் படைத்துவருகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *