தப்பிச்சுட்டீங்க கோலி... என் பந்துவீச்ச எல்லாம் உங்களால தொட கூட முடியாது; சம்பந்தம் இல்லாமல் பேசிய சோயிப் அக்தர் !! 1

விராட் கோலிக்கு எதிராக நான் மட்டும் விளையாடிருந்தால் அவரை இவ்வளவு ரன்கள் அடித்திருக்க விடமாட்டேன், என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் சாகிப் அக்தர் தெரிவித்துள்ளார்

சமகால கிரிக்கெட் தொடரின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வரும் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.

தற்பொழுது 33 வயதாகும் விராட் கோலி, மூன்று விதமான தொடரிலும் பங்கேற்று 23,650 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். அதில் 122 அரை சதங்களும் 70 சதங்களும் அடங்கும், மேலும் சச்சின் டெண்டுல்கரின் (259 போட்டி) மிகப்பெரிய சாதனையான 10 ஆயிரம் ரன்களை வெறும் 205 போட்டிகளில் பங்கேற்று விராட் கோலி கடந்துள்ளார்.

தப்பிச்சுட்டீங்க கோலி... என் பந்துவீச்ச எல்லாம் உங்களால தொட கூட முடியாது; சம்பந்தம் இல்லாமல் பேசிய சோயிப் அக்தர் !! 2

அப்படி தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்திருக்கும் விராட் கோலி,சமகால சிறந்த பந்து வீச்சாளர்களும் அஞ்சி நடுங்கும் வகையில் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர்.

அப்படிப்பட்ட விராட் கோலி விளையாடும் பொழுது நான் மட்டும் விளையாடி இருந்தால் அவரை இந்த அளவிற்கு அதிக ரன்கள் அடித்திருக்க விடமாட்டேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் சாகிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

தப்பிச்சுட்டீங்க கோலி... என் பந்துவீச்ச எல்லாம் உங்களால தொட கூட முடியாது; சம்பந்தம் இல்லாமல் பேசிய சோயிப் அக்தர் !! 3

இது குறித்து அக்தர் தெரிவித்ததாவது, “விராட் கோலி ஒரு சிறந்த நபர் மற்றும் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரர், அவர் என்னை பற்றி பேசியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ஒருவேளை விராட் கோலி விளையாடும் பொழுது அவருக்கு எதிராக நான் விளையாடி இருந்தால் அவரை இந்த அளவிற்கு ரன்கள் அடித்திருக்க விட்டிருக்க மாட்டேன் தற்பொழுது அவர் 50சதங்கள் அடித்திருந்தால், அவருக்கு எதிராக நான் விளையாடும் பட்சத்தில் அது 20 அல்லது 25 சதமாக மாறியிருக்கும் என்று சாயிப் அக்தர் தெரிவித்திருந்தார், அவரை அவுட்டாகும் விதமாக நான் மிகச்சிறந்த பந்தை வீசுவேன் என்றும் சாகிப் அக்தர் தெரிவித்திருந்தார்

விராட் கோலி சாகிப் அக்தர் நல்ல பார்மில் இருக்கும் பொழுது அவருக்கு எதிராக பேட்டிங் செய்வதென்பது மிகப்பெரும் கடினமான ஒன்று என்று பேசியதற்கு பிறகு சாகிப் அக்தர் இப்படி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *