இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மொத்தம் 3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆகிய தொடர்களில் விளையாடுகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற வெற்றிகணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இந்த நிலையில் வரும் 10 ஆம் தேதி ஒருநாள் தொடரின் முதல் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் துவங்குகிறது. இந்த போட்டியில் வெல்லும் முனைபோடு இரு அணிகளும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றது.இந்த ஒரு நாள் போட்டி தொடரை இந்தியா முழுமையாக (3-0) கைப்பற்றினால் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
அடுத்து இந்தியா – இலங்கை அணிகள் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல்போட்டி வருகிற 10-ந் தேதி (ஞாயிறு) தர்மசாலாவில் நடக்கிறது. 2-வது ஆட்டம் 13-ந் தேதி மொகாலியிலும், 3-வது ஆட்டம் 17-ந் தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது. ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்கா, இந்தியா தலா 120 புள்ளிகளுடன் உள்ளன. சதம், புள்ளிகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 2-வது இடத்தில் உள்ளன.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை இந்தியா முழுமையாக (3-0) கைப்பற்றினால் 121 புள்ளிகள் பெற்று ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்.
மாறாக இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் ஒரு புள்ளி குறைந்து 119 புள்ளிகளுடன் இருந்தும், தொடரில் ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தாலோ இந்தியா 2-வது இடத்திலேயே நீடிக்கும்.

தொடரை இழந்தாலும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது. 2-வது இடத்திலேயே நீடிக்கும்.
ஒருநாள் தொடரில் புதிய வீரர்கள்
இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் தனது சர்வதேச அறிமுக ஆட்டத்ஹ்டில் ஆடிய இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். அதே போல், உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் இடம் பெற்றுள்ளார்.

ஒருநாள் அணி விவரம் :
ரோகித் சர்மா (கேப்டன்), சிகர் தவான், அஜின்கியா ரகானே, ஸ்ரேயஸ் ஐயர், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல்
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் கேப்டன் வீராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. தற்காலிக கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளார்.