தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி திணறும் என்று ஒரு பகுதியினர் கணிக்க, இலங்கைப் பயிற்சியாளர் நிக் போத்தாஸ், தென் ஆப்பிரிககவுக்கும் சம அளவில் கடினம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கைப் பயிர்சியாளர் நிக் போத்தாஸ் கூறியதாவது:

இந்திய அணியின் அனைத்து அடிப்படைகளும் சரியாக அமைந்துள்ளன. பசுந்தரை பிட்ச் கொடுத்தால் இந்திய அணி பவுலர்கள் எதிரணியினரை சுருட்டும் திறமை கொண்டவர்கள். மட்டை விக்கெட் என்றால் அதற்கும் அதன் அடிப்படைகள் சரியாகவே உள்ளது. ஸ்பின் பிட்சா அதற்கும் இந்திய அணி தயாராக உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய பேட்டிங் வரிசை ரன்கள் எடுத்தால், தென் ஆப்பிரிக்காவுக்கும் மிகக் கடினமாக அமைந்து விடும்.

©BCCI
அணியில் மாற்றம் செய்தாலும் அது இந்திய அணியைக் காயப்படுத்துவதில்லை. தோனி ஆட்டத்தை முடித்துக் கொடுக்கிறார், இந்தவகையில் அவர் உலகின் சிறந்த வீரர், எனவே ஒருநாள் தொடரும் தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலான ஒன்றுதான்.
இவ்வாறு கூறினார் நிக் போத்தாஸ்.