தோனி 2022 ஐபிஎல் தொடரில் கூட ஆடலாம் விளக்கமளிக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்..

கொராணாவின் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் துபாய் அமீரகத்தின் பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்ற சிஎஸ்கே ஆணி எதிர்பாராதவிதமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இது ரசிகர்களிடத்தில் பெரும் கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கிய காலம் முதல் இதுவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி 10 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்த முறை எதிர்பாராத விதமாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை . இது தோனியின் வரலாற்றில் மிக மோசமான சீசனாக கருதப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் தோனி. ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடுகிறார்.

பஞ்சாபிற்க்கு எதிரான கடைசி போட்டியின் வெற்றிக்குப் பிறகு அவரிடம் கேட்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு சம்பந்தமான கேள்விக்கு அவர் கூறியதாவது நான் அடுத்த சீசனில் கண்டிப்பாக விளையாடுவேன் என்று தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியதாவது, தோனி போன்ற வீரர்கள் ரசிகர்கள் இல்லாமல் விடை பெறக்கூடாது அடுத்த ஆண்டும் ஒருவேளை ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றால் தோனி 2022 இல் ஒரு போட்டியிலாவது பங்கேற்று ரசிகர்கள் முன்னிலையில் விடைபெற வேண்டும் என்று அவர் கூறினார்