இனி கஷ்டம் தான் தம்பி... கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கங்க; கே.எல் ராகுலை எச்சரித்த முன்னாள் வீரர் !! 1

கே எல் ராகுல் இப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று டோடா கணேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 உலகக்கோப்பை தொடரில் செய்த தவறையே செய்து விடக்கூடாது என்பதில் தீவிரம் முனைப்பு காட்டும் இந்திய அணி, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை பல்வேறு விதமான தொடரிலும் ஈடுபடுத்தி தரமான வீரர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இனி கஷ்டம் தான் தம்பி... கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கங்க; கே.எல் ராகுலை எச்சரித்த முன்னாள் வீரர் !! 2

இதற்கு பிரதிபலனாக சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருவதால் எந்த வீரர்களை அணியில் இணைக்கலாம் எந்த வீரர்களை அணியிலிருந்து நீக்கலாம் என்பது குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெளிப்படையாகவே இந்திய அணிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இனி கஷ்டம் தான் தம்பி... கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கங்க; கே.எல் ராகுலை எச்சரித்த முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் நீண்ட நாட்களாகவே இந்திய அணியில் கண்சிஸ்டெண்டாக விளையாடாமலிருக்கும் கே எல் ராகுல் குறித்து தன்னுடைய வெளிப்படையான கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் தொட்டா கணேஷ் தெரிவித்துள்ளார்.

கே எல் ராகுல் குறித்து கணேஷ் தெரிவித்ததாவது, தீபக் ஹூடா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் டி20 தொடரில் அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் 2016/17 ஆம் ஆண்டு செய்தது போல் கே எல் ராகுல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும், இதேபோன்று அவர் விளையாடாமல் பொறுமை காத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம்தான் என்று தொட்டா கணேஷ் தெரிவித்துள்ளார்.

இனி கஷ்டம் தான் தம்பி... கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கங்க; கே.எல் ராகுலை எச்சரித்த முன்னாள் வீரர் !! 4

சூரியகுமார் யாதவ் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை தொடர்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *