கேப்டனே கேட்டாலும் என்னால முடியாது... யார் வற்புறுத்தினாலும் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் ; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மோயின் அலி !! 1
கேப்டனே கேட்டாலும் என்னால முடியாது… யார் வற்புறுத்தினாலும் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் ; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மோயின் அலி..

யார் வற்புறுத்தினாலும் என் ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மோயின் அழின்தெரிவித்துள்ளார்.

 

இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மோயின் அலி,இங்கிலாந்து அணிக்காக மூன்று விதமான தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணி பல வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார்.

கேப்டனே கேட்டாலும் என்னால முடியாது... யார் வற்புறுத்தினாலும் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் ; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மோயின் அலி !! 2

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை படைத்த இவர், டெஸ்ட் தொடரின் ரெகுலர் வீரராகவும் அறியப்பட்டார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்து விட்டேன் என்று தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் லீச், காயம் காரணமாக வெளியேறியதால் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு விளையாட வேண்டும் என்று பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை வைத்ததால் தன்னுடைய ஓய்வு முடிவை வாபஸ் செய்த மோயின் அலி மீண்டும் இங்கிலாந்து அணிக்காக விளையாட துவங்கினார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் மோயின் அலி., யார் வற்புறுத்தினால் இத்துடன் தான் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வையை அறிவிப்பதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

கேப்டனே கேட்டாலும் என்னால முடியாது... யார் வற்புறுத்தினாலும் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் ; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மோயின் அலி !! 3

இது குறித்து மோயின் அலி பேசுகையில்., “இதுதான் முடிவு என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.ஒருவேளை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எனக்கு மெசேஜ் செய்து ஓய்வு அறிவிப்பை வாபஸ் செய்யும்படி கேட்டாலும் நான் அந்த மெசேஜை அழித்து விடுவேன்.இத்துடன் என்னுடைய டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது.எனுடைய வாழ்வில் இந்த காலம் மிகச் சிறந்தது.ஆனால் இதுதான் எனக்கான நேரம்” என மோயின் அலி பேசியிருந்தார்.

கேப்டனே கேட்டாலும் என்னால முடியாது... யார் வற்புறுத்தினாலும் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் ; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மோயின் அலி !! 4

இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற நட்சத்திர ஆல்ரவுண்டர் மோயின் அலி., இதுவரை 3094 ரன், 204 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதில் ஐந்து சதங்களும் 15 அரை சதங்களும் அடங்கும் மேலும் பந்துவீச்சில் ஐந்து முறை 5-விக்கெட் ஹால் ஒருமுறை 10-விக்கெட் ஹால் எடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *