ஷர்துல் தாகூரின் மிகப்பெரும் பலமே இது தான்... ஓபனாக பேசிய தினேஷ் கார்த்திக் !! 1

சர்துள் தாகூர் தன்னுடைய திறமை மற்றும் தன்னம்பிக்கையின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்துள் தாக்கூர்க்கு ஆரம்ப காலத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை, ஆனால் ஐபிஎல் தொடரில் இவருடைய செயல்பாடு இவருக்கு இருக்கும் திறமையை இந்திய அணி தேர்வாளர்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டியது.

ஷர்துல் தாகூரின் மிகப்பெரும் பலமே இது தான்... ஓபனாக பேசிய தினேஷ் கார்த்திக் !! 2

இதனால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, குறிப்பாக 2021 ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சி என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு காரணமாக இருந்ததால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் வீரராக சர்துல் தாக்கூர் கருதப்பட்டார்.

இவர் இதுவரை எட்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 27 விக்கெட்களையும் பேட்டிங்கில் 254 ரன்கள் அடித்துள்ளார். ஆனால் தற்போது சார்துள் தாக்கூரின் பார்ம் சொல்லிக் கொடும் அளவிற்கு இல்லை, இருந்த போதும் எதிர்கால இந்திய அணியின் முக்கிய வீரராக சத்துள் தாக்கூர் வருவார் என்று இவர் மீது நம்பிக்கை வைத்து முன்னாள் வீரர்கள் பலர் இவருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஷர்துல் தாகூரின் மிகப்பெரும் பலமே இது தான்... ஓபனாக பேசிய தினேஷ் கார்த்திக் !! 3

அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தன் மீது வைத்த நம்பிக்கையை கைவிடவில்லை என்று அவருக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசியதாவது, பெரும்பாலான மக்கள் சர்துல் தாக்கூரை டெஸ்ட் தொடருக்கு புதியவர் என்று கருதுகின்றனர். ஆனால் மும்பை அணிக்காக 2012இல் இருந்து விளையாடியதிலிருந்தே சர்துள் தாகூரை எனக்கு தெரியும், அதிகமான மக்கள் ரஞ்சிக் கோப்பை பார்க்காததால் சர்துள் தாக்கூரை தெரிந்து வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை, சர்துள் தாக்கூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பே உள்ளூர் போட்டிகளில் 300 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியதை முதன் முதலில் பார்க்கும் பொழுது, சர்வதேச அளவில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது, இதனால் தான் அந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்படவும் முடிந்தது. அவரிடம் இருந்து நிச்சயம் தன்னம்பிக்கை என்பது மாறவே மாறாது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.