விராட் கோலி விருப்பப்பட்டால் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடலாம்; அழைப்பு விடுத்த ஆஸி., ஜாம்பவான்! 1

விராட் கோலி விருப்பப்பட்டால் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடலாம்; அழைப்பு விடுத்த ஆஸி., ஜாம்பவான்!

விராட் கோலி விருப்பப்பட்டால் அவர் எந்த நேரமும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடலாம் என அதன் ஜாம்பவான் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளனர். இதற்காக இந்திய வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றடைந்துவிட்டனர்.

இந்த தொடரில் இந்திய அணிக்கு முக்கிய வீரர்களாக கேஎல் ராகுல், பும்ரா, விராட் கோலி ஆகியோர் யூகிக்கபடுகின்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்களும் இவர்களை சமாளிக்கவே முழு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆலன் பார்டர் இந்திய அணிக்கு விராட் கோலி எப்படிப்பட்டவர் என்பது குறித்தும், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடுவதற்காக தனது அழைப்பையும் விடுத்திருக்கிறார்.

விராட் கோலி விருப்பப்பட்டால் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடலாம்; அழைப்பு விடுத்த ஆஸி., ஜாம்பவான்! 2
Virat Kohli (captain) of India celebrates his Hundred runs during day 2 of the 2nd Test match between India and Bangladesh held at the Eden Gardens Stadium, Kolkata on the 23rd November 2019.
(This test match is the first Day / Night Test match that India have taken part in)
Photo by Deepak Malik / Sportzpics for BCCI

அவர் தெரிவித்த கருத்தில், “விராட்கோலி இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். புதிய இந்தியாவின் அசைக்க முடியாத அங்கமாக அவர் இருக்கிறார். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாட விரும்பினால், எந்த நேரமும் அவரை வரவேற்க தயாராக இருக்கிறோம். அதே நேரம் அவருக்கு பிறக்கவிருக்கும் குழந்தை ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்தால் அதனடிப்படையில் பாதி குடியுரிமை பெற்று அதனையும் ஆஸ்திரேலிய அணியில் விளையாட வைக்க கோரிக்கை விடுப்போம்.

விராட் கோலி விருப்பப்பட்டால் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடலாம்; அழைப்பு விடுத்த ஆஸி., ஜாம்பவான்! 3

விராட்கோலியின் ஆக்ரோஷம் மற்றும் அசாத்தியமான பேட்டிங் திறமை இரண்டிற்கும் நான் மிகப்பெரிய ரசிகன். அவர் விளையாடும் பொழுது கண்டுகளிக்க தயாராக காத்திருப்பேன். வருகிற ஆஸ்திரேலிய தொடரில் அவரின் செயல்பாடுகளை கண்டுகளிக்க ஆவலுடன் இருக்கிறேன்.” என பெருமிதமாகவும் கூறினார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *