தினேஷ் கார்த்திக், பண்ட் இருவரில் யாருக்கு 11 பேரில் இடம் கொடுக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் நச் பதில்! 1

ஆடும் 11 வீரர்களில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் இருவரில் யாருக்கு இடம் கொடுப்பது சரியாக இருக்கும் என்ற விவாதத்திற்கு சுனில் கவாஸ்கர் தனது அனுபவம் மூலம் பதில் கொடுத்திருக்கிறார்.

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அத்தொடருக்கு தற்போதிருந்து பல்வேறு அணிகள் தயாராகி வருகின்றன. இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் டி20 தொடரில் விளையாடிவிட்டு நேரடியாக டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பந்துவீச்சு குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. அதே நேரம் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தினேஷ் கார்த்திக், பண்ட் இருவரில் யாருக்கு 11 பேரில் இடம் கொடுக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் நச் பதில்! 2

ஏனெனில் இந்திய அணியில் மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். கேஎல் ராகுல் நிச்சயம் அணியில் இருப்பார். ஏனெனில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன். மற்ற இருவர் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட். அவர்கள் இருவரில் யார் 11 வீரர்களுக்குள் இடம்பெறுவர் என்ற விவாதமே தற்போது நிலவி வருகிறது. இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுனில் கவாஸ்கர் தனது அனுபவம் மூலம் சில அறிவுரைகளை கூறியிருக்கிறார்.

“என்னை பொறுத்தவரை விளையாடும் 11 வீரர்களில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இரண்டு பேரும் இருக்க வேண்டும். ஐந்தாவது இடத்தில் ரிசப் பண்ட் விளையாடினால், ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் போட்டியின் சூழலுக்கு ஏற்ப தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரில் ஒருவர் முன்னே மற்றொருவர் பின்னே களமிறங்கி ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். ஏழு இடங்கள் இப்படி நிறைந்துவிட்டன. மீதமுள்ள நான்கு இடத்தில் முழுமையாக பந்துவீச்சாளர்கள் ஆக்கிரமிக்க வேண்டும். கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் வேண்டும் என்பதற்காக ஆடும் 11 வீரர்களில் மாற்றம் செய்து பெருத்த பின்னடைவை ஆசிய கோப்பை தொடரில் நாம் சந்தித்தோம். அது போன்ற தவறை உலகக் கோப்பை தொடரில் செய்யக்கூடாது.

தினேஷ் கார்த்திக், பண்ட் இருவரில் யாருக்கு 11 பேரில் இடம் கொடுக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் நச் பதில்! 3

இது இந்திய அணி எடுக்கும் ரிஸ்க் தான். ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் எப்படி நமக்கு வெற்றி கிடைக்கும்?. அதுவும் ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் ஒவ்வொரு போட்டிக்கும் ரிஸ்க் எடுக்க வேண்டும். நிச்சயம்  இந்திய அணியில் இந்த மூன்று பேரும் தொடர் முழுவதும் விளையாட வேண்டும். எக்காரணத்தைக் கண்டும் யாரேனும் ஒருவரை வெளியில் அமர்த்தி விடக்கூடாது என்பதே எனது கருத்து.” என ஆணித்தனமாக தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *