யாருமே என்கிட்ட எதுவும் சொல்லல; வேதனையை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் !! 1

தன்னை அணியில் இருந்து நீக்கியது குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது மனம் திறந்து பேசியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பை வெற்றி பெற்றுக் கொடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், 2021 ஐபிஎல் தொடர் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்பதால் ஹைதராபாத் அணி வார்னரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது, பின் எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர் மைதானத்திற்கு வரவேண்டாம் என்று ஹோட்டலிலேயே இருக்கும் படி தெரிவித்துவிட்டது. ஹைதராபாத் அணி இப்படி செய்தது முறையான காரியமில்லை என்று ஹைதராபாத் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

யாருமே என்கிட்ட எதுவும் சொல்லல; வேதனையை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் !! 2

இதுவரை டேவிட் வார்னரை ஏன் அணியில் இருந்து விலக்கியது என்ற காரணத்தையும் ஹைதராபாத் அணி தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் டேவிட் வார்னர் ஹைதராபாத் அணி தன்னை நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

யாருமே என்கிட்ட எதுவும் சொல்லல; வேதனையை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் !! 3

அதில், ஒரு அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பின் அணியில் விளையாட வைக்க வில்லை என்றால் அந்த அணியில் இருக்கும் இளம் வீரர்களிடம் என்ன கூறுவீர்கள்..? மற்றும் அணியில் இருக்கும் மற்றவரிடம் என்ன கூறுவீர்கள்..? என்னை மிகவும் பாதித்தது எது என்றால்,எந்த ஒரு காரணமும் கூறாததால் மற்றவர்கள் இதற்காகத்தான் வார்னரை அணியில் இருந்து நீக்கி உள்ளார்கள் என்று ஏதாவது ஒன்றை நினைத்திருப்பார்கள்.

எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறி இருக்கலாம் அதற்காக நான் அவர்களை அடித்து இருக்க மாட்டேன், அல்லது கடித்து வைத்திருக்க மாட்டேன், வெட்கப்பட்டு இருக்கமாட்டேன், ஆனால் ஐதராபாத் அணி இது சம்பந்தமாக என்னிடம் எதுவுமே கூறவில்லை இது எனக்கு மிகப் பெரும் வேதனையை அளித்தது என்று டேவிட் வார்னர் தெரிவித்திருந்தார்.

டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி நீக்கினாலும் ஹைதராபாத் அணி ரசிகர்கள் பெரும்பாலானோர் டேவிட் வார்னர் தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *