"உனக்கு நான் புதுசு இல்ல, ஆனால் சிஎஸ்கே டீம் புதுசு.. அதனால இப்படி.." - ஸ்ரீனிவாசன் முன்பு பென் ஸ்டோக்ஸ்-க்கு சொன்ன தோனி! அப்படி என்ன சொன்னார்??? 1

 

“சிஎஸ்கே உரிமையாளர் ஸ்ரீனிவாசன் முன்பு பென் ஸ்டோக்ஸ்-ஐ மேடைக்கு அழைத்து வித்தியாசமான முறையில் வரவேற்றுள்ளார் மகேந்திர சிங் தோனி.” அப்படி என்ன பேசினார் என்பதை கீழே காண்போம்.

இந்த வருட ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 31ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனுக்கு முழுமையாக கேப்டன் பொறுப்பில் ஆடுகிறார் தோனி.

"உனக்கு நான் புதுசு இல்ல, ஆனால் சிஎஸ்கே டீம் புதுசு.. அதனால இப்படி.." - ஸ்ரீனிவாசன் முன்பு பென் ஸ்டோக்ஸ்-க்கு சொன்ன தோனி! அப்படி என்ன சொன்னார்??? 2

இரு அணிகளிலும் சில புதிய வீரர்கள் இணைந்திருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவிதமாக, சிஎஸ்கே அணிக்கு கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் 16.25 கோடி கொடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்டார். ஏற்கனவே அணியில் மோயின் அலி, ஜடேஜா போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்கள் இருக்கையில், மேலும் ஒரு தலைசிறந்த ஆல்ரவுண்டர் சிஎஸ்கே அணியில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்து கொண்டாடத் துவங்கிவிட்டனர். இன்றளவும் அந்த கொண்டாட்டம் ஓயவில்லை.

இந்த வருட ஐபிஎல்-இல் பென் ஸ்டோக்ஸ் எப்படி செயல்பட போகிறார். தோனி இவரை எந்த இடத்தில் பயன்படுத்தவுள்ளார் என்பதை காண்பதற்கு ஆவலாக இருக்கின்றனர்.

"உனக்கு நான் புதுசு இல்ல, ஆனால் சிஎஸ்கே டீம் புதுசு.. அதனால இப்படி.." - ஸ்ரீனிவாசன் முன்பு பென் ஸ்டோக்ஸ்-க்கு சொன்ன தோனி! அப்படி என்ன சொன்னார்??? 3

இதற்கிடையில் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட புதிய வீரர்கள் சிஎஸ்கே அணியில் இணைந்தபிறகு அவர்களுக்கு ஜெர்சி வழங்கும் விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் புதிய வீரர்கள் அனைவரையும் கேப்டன் தோனி வரவேற்றார். மேலும் பென் ஸ்டோக்ஸ், ரஹானே ஆகியோருக்கு ஜெர்சியையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். இவர் முன்பு பென் ஸ்டோக்ஸ் குறித்து பேசிய தோனி கூறுகையில், “பென் ஸ்டோக்ஸ், உனக்கு நான் புதிதான அவன் அல்ல. ஆனால் இந்த சிஎஸ்கே அணி முற்றிலும் புதிதானது. சிஎஸ்கே அணியின் பண்பு குறித்து கேள்விப்பட்டிருப்பாய் என நினைக்கிறேன். இல்லையெனில், ஸ்டோக்ஸ் உட்பட புதிய வீரர்கள் எல்லோரும் போகப்போக புரிந்து கொள்வர்.

"உனக்கு நான் புதுசு இல்ல, ஆனால் சிஎஸ்கே டீம் புதுசு.. அதனால இப்படி.." - ஸ்ரீனிவாசன் முன்பு பென் ஸ்டோக்ஸ்-க்கு சொன்ன தோனி! அப்படி என்ன சொன்னார்??? 4

முதலில் அணியில் புதிதாக இணைந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். எந்தவித தயக்கமும் இன்றி உங்கள் இல்லம் போல இங்கு செயல்படலாம். சீசன் முடியும் வரை உங்களுக்கு தேவையானது அனைத்தும் கிடைக்கும். அதேபோல் அணிக்கு தேவையானதை நீங்களும் செய்து கொடுக்க வேண்டும். அணிக்கு தேவை உங்கள் உழைப்பு மட்டுமே. சீசன் முடியும்வரை ஒற்றுமையாக செயல்படுவோம்.” என சில நம்பிக்கை வார்த்தைகளை பேசி பென் ஸ்டோக்ஸ் உட்பட புதிதாக இணைந்துள்ளவர்கள் சகஜமாக உணரும்படி நடந்து கொண்டார் தோனி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *