இந்திய அணியை கண்டாலே பயமாக இருக்கிறது – டி வில்லியர்ஸ்

இந்திய அணியை கண்டாலே பயமாக இருக்கிறது என தென்னாபிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இந்திய வீரர்கள் அனைவரும் இந்த லீக்கினால் அனுபவம் அடைகிறார்கள் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் அதிரடி ஏபி டி வில்லியர்ஸ் கூறினார்.

இந்தியன் பிரீமியர் லீக் என்னும் தொடர் இந்தியாவில் 2008-இல் இருந்து நடந்து வருகிறது. முதல் தொடரில் இருந்தே இந்தியாவில் இருக்கும் திறமைகளை வெளிகொண்டு வருகிறது. அம்பதி ராயுடு, யூசுப் பதான், அக்சர் பட்டேல், சஞ்சு சாம்சன், ஜேஸ்ப்ரிட் பும்ரா ஆகிய அனைவரும் ஐபில் தொடர்களில் கலக்கினார்கள். ஐபில் மட்டும் இல்லாமல் இந்திய அணிக்கே விளையாடியுள்ளார்கள். இந்த ஐபில்-யிலும் அதேதான். நிதிஷ் ராணா, பசில் தம்பி, ராகுல் திருப்பதி என திறமையானவர்களை இந்தியாவிற்கு காட்டியுள்ளது.

“இந்திய அணியை கண்டாலே பயமாக இருக்கிறது; அவர்களின் பலம் அதிகரித்து கொண்டே இருக்கிறது, இதற்கெல்லாம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபில்) தான் காரணம்,” என ஏபி டி வில்லியர்ஸ் கூறினார்.

மேலும்,”இந்த ஐபில் தொடர் பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளது. எந்த அணியும் இது போல் அனுபவம் பெறுவதில்லை. ஒருநாள் கண்டிப்பாக இது போல் அனைத்து நாடுகளும் அனுபவம் பெறுவார்கள், ஆனால் அன்றும் இந்தியாவின் கை தான் ஓங்கி நிற்கும். இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது,”என டி வில்லியர்ஸ் கூறினார்.

இந்தியாவிற்கு பிறகு பல நாடுகளில் டி20 கிரிக்கெட் தொடர்பான லீக் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. 2011-இல் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக், பிறகு இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் என அனைத்து நாடுகளிலும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன.

இந்த ஐபில்-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் ஏபி டி வில்லியர்ஸ் சொல்லிக்கொள்ளும் போல் ஜொலிக்கவில்லை. 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 216 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர் விளையாடவுள்ளது தென்னாபிரிக்கா அணி. இதனால், இந்த ஐபில்-இல் பங்கேற்ற அனைத்து தென்னாபிரிக்கா வீரர்களும் போன வாரமே ஊருக்கு கிளம்பினார்கள்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.