நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் டி20 தொடர் கேப்டனாக செயல்பட மாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்தார்,அதே போன்று உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 தொடர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்தார்,இதன் காரணமாக டி20 தொடரின் புதிய கேப்டனாக இந்திய அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு ஒரு கேப்டன் செயல்பட்டால்தான் சிறப்பாக இருக்கும் என்பதால் ஒருநாள் தொடருக்கான கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் இந்த முடிவு மிகவும் வரவேற்க கூடியது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் ரோஹித் சர்மா தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஒருநாள் தொடர் கேப்டனாக செயல்படுவதால், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தனது முதல் தொடரை எப்படி கையாளும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகவும் ஆவலாக உள்ளது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ரோகித் சர்மா தலைமை குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், “ரோகித் சர்மா ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் அவர் இந்திய அணியை எப்படி வழி நடத்துவார் என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளது, அவருடைய தலைமையின் கீழ் நான் விளையாடி உள்ளேன், அப்பொழுது நான் அவர் ஒரு கேப்டனாக என்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து வருவேன், அவர் அணியை கையாளும் விதம் மிகவும் அருமையாக இருக்கும்,நிச்சயம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சிறப்பாகவே செயல்படும். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி பலமுறை இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது நான் மிகவும் நெருக்கடியாக உணர்வேன் அப்பொழுது அதை மிக எளிதாக கையாண்டு ரோகித்சர்மா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார், நிச்சயம் இவருடைய ஐபிஎல் அனுபவம் இந்திய அணிக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும்.

மேலும் பேசிய அவர், நான் விராட் கோலி தலைமையில் ஒருமுறைகூட விளையாடியது கிடையாது அதனால் அவரைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் நிச்சயம் ரோஹித் சர்மா சிறந்த முறையில் அணியை வழிநடத்துவார்.