டி20 தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர் ! க்ருணல் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதலே காரணம் ! 1

டி20 தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர் ! க்ருணல் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதலே காரணம் !

2021ஆம் ஆண்டு நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் கோப்பை தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான முழு அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 38 அணிகளை எலைட் குரூப் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் பிளேட் குரூப் என ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஶ்ரீசாந்த், தினேஷ் கார்த்திக் என பலர் கலந்து விளையாடி வருவதால் இந்த தொடருக்கான வரவேற்பு சிறப்பாக இருந்தது. 

இந்நிலையில், 38 அணிகளுள் ஒன்றான பரோடா அணியின் கேப்டனாக க்ருணல் பாண்டிய செயல்பட்டு வருகிறார். இந்த பரோடா அணி க்ரூப் சி பிரிவில் இடம்பெற்று விளையாடி வருகிறது. பரேடா அணி கடந்த ஜனவரி 10ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய பரோடா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. 

டி20 தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர் ! க்ருணல் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதலே காரணம் ! 2

இந்நிலையில், உத்தரகாண்ட் அணியுடனான இந்த முதல் போட்டிக்காக பரோடா அணி சனிக்கிழமை அன்று தீவிரமாக பயிற்சி கொண்டது. இதில் பரோடா கேப்டன் க்ருணல் பாண்டியா சிறப்பாக பயிற்சி செய்து வந்தார். துணை கேப்டன் தீபக் ஹுடாவும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக கேப்டன் க்ருணல் பாண்டியா மற்றும் துணை கேப்டன் தீபக் ஹுடா இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக துணை கேப்டன் தீபக் ஹீடா அணியில் இருந்தும் இந்த சையது முஷ்டாக் அலி தொடரிலிருந்து முற்றிலுமாக வேளியேறுவதாக பரோடா அணி நிறுவாகத்திடம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வெளியேறினார் தீபக் ஹீடா. இவரது விலகல் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

டி20 தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர் ! க்ருணல் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதலே காரணம் ! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *