நான் யார் என்பதை நிரூபிப்பேன்; சுப்மன் கில் சபதம் !! 1

நான் யார் என்பதை நிரூபிப்பேன்; சுப்மன் கில் சபதம்

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

நான் யார் என்பதை நிரூபிப்பேன்; சுப்மன் கில் சபதம் !! 2

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பிவந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்கவுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த தொடரின் முதல் டி.20 போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து பேசியுள்ள சுப்மன் கில்,  வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

நான் யார் என்பதை நிரூபிப்பேன்; சுப்மன் கில் சபதம் !! 3
India’s Shubman Gill during the Tri-Series match at the Fischer County Ground, Leicester. (Photo by Mike Egerton/PA Images via Getty Images)

‘நான் தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல்  டெஸ்டில் விளையாடி கொண்டிருந்தேன். நான் வீரர்கள் அறைக்கு வரும்போது என்னுடைய சக அணி வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வான செய்தியை தெரிவித்தார்கள். நான் என்னுடைய போனை உடனடியாக செக் செய்தேன்.

நான் யார் என்பதை நிரூபிப்பேன்; சுப்மன் கில் சபதம் !! 4
Shubman Gill comes into the squad with limited expectations but is confident of succeeding when his time does come © Getty

போன் மிஸ்டு கால்கள், மெசேஜ்-களாலும் நிரம்பி கிடந்தது. தற்போது மகிழ்ச்சியில் உள்ளேன். விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நாங்கள் சிறந்த அணி. விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *